Monday 4 April 2011

Tamil Translation

Tamil Translation( of the short story 'The Clock'
கடிகாரம்
மலையாளச சிறுகதை
டாக்டர் ஜி.கோபால பிள்ளா
துறைத்தலைவர் ,கீழ்த்திசை மொழிகள் துறை , லயோலா கல்லூரி , சென்னை
தமிழ் மொழிபெயர்ப்பு : வையவன்


பன்னிரெண்டாம் மனியைக்காட்டும் கோட்டில் ஒடுங்கிப்போயிருந்த கடிகாரத்தைப் பார்த்து சேதுராமன் தனக்குத் தானே கேட்டுக் கொண்டான். 'எனது இந்த இரவுகளில் என் முடிவு எந்தத் தேதியில் இருக்கும்? அல்லது என் மரணம் ஒரு பகலிலாக இருக்குமா? எனில் அது எந்தப் பகலில் அது நேரும் ?

பகலானால் என்ன? இரவானால் என்ன? அந்த ஒன்று எனக்காகக் காத்திருக்கின்றது ஆனால் அவற்றுக்குத் தெரியுமா நான் அவற்றைத் தேடிக் கொண்டிருப்பது? இல்லை. அதை அவை அறிய வாய்ப்பில்லை

சேதுராமன் மீண்டும் கடிகாரத்தைப் பார்த்தான். நேரம் என்னவாயிற்று என்று தெரிந்து கொள்ள. ஆனால் கடிகாரம் தான் செத்துப்போய் இருந்ததே! சரியாக ஒரு பனிரெண்டாம் மணியின் போது தான் அது நேர்ந்திருக்கிறது. அது நிச்சயம்.. காரணம் முட்களில் ஒன்று --சிறியது-- புலப்படவில்லை. நீளமான முள்ளின் கீழ் தான் அது ஒளிந்து கொண்டிருக்கவேண்டும். இல்லாவிட்டால் கடிகாரத்தின் கண்ணாடிக் கூட்டை விட்டு அந்த காலத்தின் அடிமை எங்கே ஓடிப்போக முடியும்?

சிறியதும் பெரியதுமான கடிகார முட்கள் பன்னிரெண்டாம் மணியை எட்டியதும் சலனம் இழந்து விட்டன. துடிப்பின் பாவனை கூட இல்லை . ஆனால் என்ன? அந்த மேஜைக்கடிகாரம் சேதுராமனின் அறைக்கு ஓர் அலங்காரம் அல்லவா! அது எப்படி சிறியதும் பெரியதுமான முட்களின் நாடித்துடிப்பு பனிரெண்டாம் மணியை
அடைந்ததுமே ஒற்றுமையாக நிலைத்து நின்றுவிட்டது? அது தான் கடிகாரத்தின் அகால மரணத்திற்கான அடிப்படை.
முட்டாள்தனம் .. படுமுட்டாள்தனம்.. சேதுராமன் தன்னைத் தானே இகழ்ந்து கொண்டான்
கடிகார முட்களில் ஒன்று மட்டும் எப்படி உயிர் வாழ முடியும்? மணி முள்ளின் உயிர் போய் நிமிட முள் மட்டும் உயிர் வாழ்வது அசாத்தியம். அது சாகாமலிருப்பது அசாத்தியம்.
நிமிடமும் மணியும் இங்கே ஒன்றிப்போய் ஆஹுதி செய்கின்றன. பின்னிப்பிணைந்த காதலர்கள் போல.காலத்தைக் காட்டும் இந்த முட்களின் மரணத்தை ஓர் ஏகாத்ம மரணம் என்று பெயர் சூட்டி சாஸ்திர மயானத்தில் ஓங்கி எழுகின்ற சவத்தின் மீது சேதுராமன் வீசி எறிந்தான்.
அப்போதும் கூட மனம் சமாதானம் அடையவில்லை. உள்ளத்தின் உள்ளிருந்து எதுவோ ஓலமிட்டது அவன் அறை விளக்கை அணைத்தான். அறையை விட்டு வெளியேறி வராந்தாவிற்கு வந்தான். எதையோ கூர்ந்து கவனிப்பது போல நான்கு புறமும் சுற்றிச சுற்றிப் பார்த்தான். கன்னங்கரேன்ற காரிருள். ராக்கோழிகள் காதை ரம்பத்தால் அறுப்பது போல இரைந்தன. ஆகாயத்தில் ஆங்காங்கே நட்சத்திரங்கள் பூத்தன கூடவே சில எரிந்து வீழ்ந்தன.
சேதுராமன் எதற்காக விளக்கை அணைத்துவிட்டு வெளியே வந்தான்?
அவனுக்கு நேரம் தெரிந்தாக வேண்டும். இப்போது மணி என்ன?
யாரிடம் கேட்பது?
நேருக்கு நேரே மூக்கைத் தொடுகின்ற இருட்டிடமா?
அல்லது மாண்டு போன கடிகாரத்திடமா?
அவன் வெகுநேரம் வராந்தாவில் நின்ற பின் ஒரு முடிவுக்கு வந்தான். இரவு மணி பன்னிரண்டு கழிந்து கிட்டத்தட்ட இரண்டு இரண்டரை மணி ஆகியிருக்கவேண்டும்.. ஒரு ஊகம் தான். ஊகம் சரியாக இருக்கவேண்டும் என்றில்லை.எனினும் நள்ளிரவு கடந்து வெகு நேரமாகி இருக்க வேண்டும்.
அலுத்துப்போய் அவன் அறைக்குத்திரும்பினான். விளக்கைப் போட்டான் அறைக்கு அலங்காரமாக மேஜையின் மீது கடிகாரம். மாண்டுபோகாத காலைத்தைக் குறித்து நினைவூட்டுவது போல. சேதுராமன் அதன் முன்னே போய் உட்கார்ந்தான். சற்று நேரம் கடந்தது. மற்றொரு சந்தேகம் தோன்றி மண்டையைக் குடைந்தது.
இந்த கடிகாரம் செத்துப்போனது இரண்டு இரண்டரைக்கு முந்திய இந்த நள்ளிரவில் தானா?
முந்திய இந்த நள்ளிரவில் தானா?சேதுராமன் தன சந்தேகத்தின் முட்டாள்தனத்தை நினைத்து மீண்டும் ஒரு தன இகழ்ச்சியோடு சிரித்துக்கொண்டான். கடிகாரம் மாண்டுபோன பனிரெண்டாம் மணி இரவினுடயதா
பகலினுடையதா? என்றால் எந்த இரவின் அல்லது பகலின் பன்னிரெண்டாம் மணியில் அந்த முடிவு நேர்ந்தது?
சேதுராமனுக்கு தலை குடையத் தொடங்கியது.
ஒரு நாளைக்கு இருபத்திநான்கு என்கிறார்கள். ஆனால் கடிகாரத்தில் பன்னிரண்டு எண்கள் தான் இருக்கின்றன. அதுவும் ஒன்று..இரண்டு ..மூன்று என்று விளக்கமாக இல்லை. பன்னிரண்டு.ஒன்பது ஆறு .. மூன்று என்று புரிந்துகொள்ள முடியாத விதத்தில் இருக்கின்றன இதற்கிடையே மணியையும் நிமிடத்தையும் பிரிக்கிற கோடுகள் வேறு. அந்தக்கோடுகள் இரவுக்கு உரியனவா பகலுக்குரியனவா? சேதுராமன் சிந்தனை வளையத்தில் சிக்கினான்.
சற்று நேரம் கழிந்தது. மெதுவாக ஓர் அமுக்கத்தோடு சிரிக்கத்தொடங்கினான். பரிகாசச் சிரிப்பு. தன்னைத் தானே இகழும் பரிகாசச் சிரிப்பு.இந்தப் பன்னிரண்டு இரவு பகல் இரண்டிற்கும் உரியது என்று யாருக்குத்தான்
தெரியாது? தன கேள்விக்குப்பதில் இல்லை. இந்த கடிகாரம் மரித்தது பகலின் பன்னிரெண்டா இரவின் பன்னிரெண்டா?
வாழ்வின் அகத்தையும் புறத்தையும் தேடுவது போல பன்னிரெண்டாம் மணியின் பகலையும் இரவையும் தேடியபடி சேதுராமன் உறக்கம் இழந்தான். பதில் கிடைக்கவே இல்லை ஏதோ ஒரு வேளையில் ஒடுங்கிய கடிகாரம் சேதுராமனையும் ஒடுக்கிவிட்டது.
என்று எந்த வேளையில் நடந்தது கடிகாரத்தின் மரணம்? எப்படி அதைத் தீர்மானிப்பது? கடிகார டாக்டர்களுக்கு அந்தத் திறமை உண்டா? அவர்களுக்கு இல்லையெனில் வேறு யாருக்காவது? சேதுராமன் நிலை குலைந்து போனான்.
மரித்துப்போன கடிகாரத்தின் வெளுத்த முகத்தைப் பார்த்தபடியே சேதுராமனின் உறக்கம் தொலைந்தது.
செத்தபின்னும் சாம்பலாகாத கடிகரத்திற்கு அவன் தூக்கம் கெட்டுப்போனது தெரியுமா? சேதுராமன் அதற்குப்பின் உறங்காமல் கடிகாரத்திற்குத் துணையாக அதனருகிலேயே இருந்தான்.. இரவுகளுக்கும் பகல்களுக்கும் இடையே கடிகாரத்தின் உள்ளேயே மணிகளைக் குறித்தும் நாட்களைக் குறித்தும் மட்டுமே சிந்தித்தான்.
முடிவில் கடிகாரத்தின் மரணம் நேர்ந்த , எங்கேயோ தொலைந்து போன பன்னிரெண்டாம் மணியைக் கண்டுபிடிக்க அதன் பின்னே யாத்திரை போனான். நெடுன்தொலைவான யாத்திரை அது. கடிகாரத்தின் முட்கள் எட்டிய அகாத தூரத்தின் கால அளவிலே உறைந்துபோன
செத்தபின்னும் சாம்பலாகாத கடிகரத்திற்கு அவன் தூக்கம் கெட்டுப்போனது தெரியுமா? சேதுராமன் அதற்குப்பின் உறங்காமல் கடிகாரத்திற்குத் துணையாக அதனருகிலேயே இருந்தான்.. இரவுகளுக்கும் பகல்களுக்கும் இடையே கடிகாரத்தின் உள்ளேயே மணிகளைக் குறித்தும் நாட்களைக் குறித்தும் மட்டுமே சிந்தித்தான்.
முடிவில் கடிகாரத்தின் மரணம் நேர்ந்த , எங்கேயோ தொலைந்து போன பன்னிரெண்டாம் மணியைக் கண்டுபிடிக்க அதன் பின்னே யாத்திரை போனான். நெடுன்தொலைவான யாத்திரை அது. கடிகாரத்தின் முட்கள் எட்டிய அகாத தூரத்தின் கால அளவிலே உறைந்துபோன ஒரு பன்னிரெண்டாம் மனியைத்தேடி சேதுராமன் காலத்தின் பின்னால் நடந்தான்.
நெடுந்தொலைவு . நெடுங்காலம் ….
தனது சொந்த முடிவின் பகலையும் இரவையும் குறித்து எப்போதும் சிந்தித்துப் பார்த்துக்கொண்டிருக்கும் சேதுராமன் அப்போது அதை மறந்தே போனான் அவனது அந்த யாத்திரையில் அந்த பனிரெண்டாம் மணி எதிர்ப்படவே இல்லை. எனினும் விடாது அந்த பனிரெண்டாம் மணியைப் பின்தொடர்ந்து நரை திரைகளோடு அவன் ஓடிக்கொண்டே இருந்தான்.
முடிவில் ஒரு நாள்-
காலத்தின் மரண வேளை எதுவென்று கண்டறிகிற யாத்திரையில் சேதுராமன் காலத்தின் காலடியில் அடங்கிப்போனான்
எவரும் அறியாது. ---
மேஜைக்கடிகாரத்தைப்போலவே வெளுத்து நிர்ச்சலனமாணன்,
அது கூட பனிரெண்டாம் மணியில் தானா? இரவிலா பகலிலா?
உரிமை கோருவோர் இல்லாத ஏதோ ஒரு மணியின் ஒரு நிமிஷத்திலே அது நேர்ந்தது.
சிறுகச் சிறுகச் சவம் அழுகியது நாறியது பின்னர் காலத்தின் மரணத்தைத்தரிசிக்க சென்ற சேதுராமனின் எலும்புகள் மயான மேட்டில் பஸ்மமாகிப் புகையாகிப் பறந்தன
எனினும் சேதுராமனின் கடிகாரம் சாம்பலாகவில்லை. காலம் வழங்கிய ஓர் இயக்கசக்தியால் அந்த கடிகார முட்கள் மீண்டும் துடிக்கத்தொடங்கின. பகலிலோ இரவிலோ மரிக்காத மாளவே இயலாத நேரத்தின் அளவைக்
காட்டும் அந்த முட்கள் காலத்தின் எல்லையைத் தேடிக்கொண்டு நிற்காமல் ஓடலாயின.

No comments:

Post a Comment